மின் பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை

64f841155acf64a16d7749b5e4601cb0 XLggg

மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற அமர்வில் வாய்வழி கேள்விகளுக்கு பதில் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே சுமார் 44 பில்லியன் ரூபாவை நாங்க அறவிட வேண்டியுள்ளது. எனினும் நிலுவைத் தொகையை செலுத்த பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 12 ஆம் மாதத்துக்குள் செலுத்த வாய்ப்பளித்துள்ளோம்.

ஆனால் அந்த மாதத்துக்கான கட்டணத்துடன் அதனை செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version