கோர விபத்தில் ஒருவர் உயிாிழப்பு!

IMG 20230502 WA0025

கோர விபத்தில் ஒருவர் உயிாிழப்பு!

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
வடமராட்சி அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற  மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சத்தியநாதன் சத்தியானந்; என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Exit mobile version