rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

Share

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள், தாய்மார் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இவ்வாறாக வேலைவாய்ப்புக்காக செல்லும் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் இறுதிக்கு முன்னதாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் குறித்து மாத்திரம் தாம் அறிந்திருப்பதாகவும், பணியகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாமல் செல்வோர் தொடர்பான புள்ளிவிவரங்கள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...