நாட்டில் நாளாந்தம் ஒரு லட்சம் குடும்பங்கள் பட்டினியால் தவிப்பு!

staving e1659087749473

இலங்கையில் ஒரு லட்சம் குடும்பங்கள், உணவு இன்மையால் நாளாந்தம் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன், 75 ஆயிரம் குடும்பங்கள் நாளாந்தம் என்ன உண்கிறோம் எனத் தெரியாத நிலையில், கிடைப்பவற்றை உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் நிலைமை மோசமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version