download 21 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…!

Share

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…!

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த வாகனத்தில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய – மஹாபலஸ்ஸ பகுதியில் நேற்று இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்துக்கிடமாக பயணித்த லொறியொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மீறிய லொறிச் சாரதி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்திய போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் லொறியிலிருந்த மாடுகளைக் காட்டுப் பகுதியில் விடுவித்து, வீரகட்டிய பகுதிக்குத் தப்பிச் சென்றனர்.

அதன்போது, பொலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்தனர்.

சம்பவத்தில் லொறியில் இருந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிரிழந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

லொறியிலிருந்த மேலும் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த பசுவொன்று கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதேவேளை, லொறியைத் துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் வாகனத்துக்கு  இடையூறு ஏற்படுத்திய கார் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...