காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
காலி – அஹுங்கல்ல(Uggalla) மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் வயற்றுப்பகுதியில் தோட்டாக்கள் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

