இலங்கை அண்மைய நாட்களில் ஒமைக்ரோன் வைரஸ் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் உலகின் ஏனைய நாடுகளைத் தாக்கிய பின்னரே இலங்கையில் வேகமாக பரவியது. அந்த வகையில் ஓமிக்ரோன் பிறழ்வானது தற்போது தான் உலக நாடுகளில் பரவி இருக்கின்றது.
இலங்கையில் ஓமிக்ரோன் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு 800க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரண வீதமும் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் ஒரு முழு முடக்கத்திற்கு தயாராக வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment