18 18
இலங்கைசெய்திகள்

12 ஆண்டுகளாக வெள்ளை யானையாக மாறியுள்ள ஒலுவில் துறைமுகத்திட்டம்

Share

12 வருடங்களாக செயலற்றிருக்கும், அம்பாறை – ஒலுவில் துறைமுகத்திட்டத்தை மீண்டும் செயற்படுத்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், அதற்கான சாத்தியமான வழிகளை கண்டுபிடிப்பதில் அரசாங்கத்தினால் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகத் திட்டத்துக்கான கடன் ஒப்பந்தம், டென்மார்க்கின் நோர்டியா வங்கிக்கும் இலங்கையின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகத்திற்கும் இடையே 2008 மே 23 அன்று, கையெழுத்தானது.

இதன்படி மொத்த திட்ட செலவு 46 மில்லியன் யூரோக்களாகும் இந்த திட்டம் 2013 இல் நிறைவடைந்தது. எனினும், துறைமுகம் இப்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.

அத்துடன், துறைமுக நுழைவாயிலில் மணல் திட்டுகள் குவிந்து கிடப்பதால் கப்பல்கள் வரமுடியாமல் உள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருவதாக பிரதியமைச்சர் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...