பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை
நிறுவனம் தொடர்பான ஆவணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
வங்கியின் உத்தியோகபூர்வ இலட்சினையை பயன்படுத்தி பல மோசடியான வியாபாரங்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான எந்தவொரு மோசடி வியாபாரத்திற்கும் வங்கிக்கும் தொடர்பில்லை என்பதை வலியுறுத்தியுள்ளதுடன் குறித்த மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் இந்த மோசடியான வியாபாரங்கள் நடத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Leave a comment