8 6 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் கைது

Share

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் கைது

கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிற்றூந்து மற்றும் இரு உந்துருளிகளில் பயணித்த சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் 2 கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஹீனடியன மகேஸ் என்ற பாதாள உலக நபரின் அறிவுறுத்தலின் பேரில், மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாம் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

ஹீனடியனா மகேஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி வர்த்தகர்களை இலக்கு வைத்து கப்பம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...