ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நடவடிக்கையை சர்வதேச விசாரணை ஆணைகுழுவுக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுவிவாதத்தின் போதே முன்வைத்தார்.
இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவர்களால் ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு பெற்று தருவதாக கடந்த தேர்தல் மேடைகளில் பாரிய அளவில் பேசப்பட்டன. ஆனால் இப்பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வுகள் எட்டப்படவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் தண்டனைகள் பெறும் வரை நாம் குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து உரையாற்றிய இவர்,
பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளில் அரசியல்வாதிகள் தலையிடுவதால் விசாரணைகளை மேற்கொள்ள இயலாது செயலிழந்து நிற்பதை நாம் காணுகின்றோம்.
தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபரின் வாக்குமூலம் பெறப்படவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை சர்வதேசத்துக்கு வழங்குவதன் மூலமே கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்களுக்கும் நாம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews