யாழ்.பருத்தித்துறை புலோலி தெற்கைச் சேர்ந்த கிளிநொச்சி பட்டின சபையின் முன்னாள் தலைவர் அமரர் முருகேசு பாலசுப்பிரமணியத்தின் நினைவாக வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் ஏற்பாட்டில், பருத்தித்துறை பரமானந்தா சிறுவர் இல்லத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான 25 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பெற்றோரை இழந்த குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவையுடையவர்கள் ஆகியோருக்கே இந்த உணர்வு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், சட்டத்தரணி ஏகே நடராஜா, பரமானந்தா சிறுவர் இல்ல தலைவர் எஸ்.எம். கதிரவேலு, நிர்வாக உத்தியோகத்தர் கே. கிருஷ்ணராஜா, நன்னடத்தைப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#SriLankaNews
Leave a comment