24 6617831346166
இலங்கைசெய்திகள்

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற உயரதிகாரிகள்!

Share

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற உயரதிகாரிகள்!

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட சுமார் 8000 பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தகவலின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் மட்டும் ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் 442 பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...

25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்

நாமல் ராஜபக்ஷ: தனக்கும் SLPP உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேவையில்லை – சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்க முடிவு!

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனக்கும் தனது சக SLPP...

images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...