24 67012d3b585d5
இலங்கைசெய்திகள்

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி

Share

விருப்பு தெரிவு போட்டியை தவிர்க்கும் பொறிமுறையை தயாரிக்கும் தேசிய மக்கள் சக்தி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுப் பட்டியலை மாவட்ட மட்டத்தில் இறுதி செய்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையை தேசிய மக்கள் சக்தி தயாரித்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும் தலையிடாது எனவும், விருப்பு வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை, தமது கட்சி உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போல் அல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் நியமனப் பட்டியல்கள் மாவட்ட மட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அபேசிங்க, இறுதி செய்யப்பட்ட பட்டியல்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி, தனது நியமனப் பட்டியல்களிலும் தேசியப் பட்டியலிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கும், அதேவேளை இரண்டு பட்டியல்களிலும் அதிக தொழில் வல்லுனர்களும் அடங்குவர்.

மேலும், கட்சிக்குள் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...

Ravindra Wijegunaratne
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை.

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...

ஜாலிய விக்ரமசூரியவை
இலங்கை

 அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருக்கு பிடியாணை.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலை,மறைவாகியுள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர்...

Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...