சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கு அறிவிப்பு!

G.C.E
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தினத்துக்கு பின்னர் விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பெப்ரவரி 1 முதல் விண்ணப்பங்கள் இணையம் ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிபர்கள் ஊடாக பாடசாலை விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிக்ன முடியும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தாங்களாகவே விண்ணப்பிக்க முடியும்.

www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic அல்லது பரீட்சை திணைக்களத்தின் ‘Exams Sri Lanka’ என்ற அலைபேசி செயலி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

#SriLankaNews

Exit mobile version