24 66fa3651620df
இலங்கைசெய்திகள்

வருமான வரி செலுத்தாதோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Share

வருமான வரி செலுத்தாதோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க திணைக்களம் அவகாசம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்தது.

வரி செலுத்தத் தவறினால், சட்டப்படி வருமான வரி செலுத்தாமல் அல்லது தாமதமாகச் செலுத்தியதற்காக அபராத வட்டி விதிக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்தது.

எனினும், நிலுவையில் உள்ள வரிகள் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், 1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Rajapaksa 759
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேரணி: மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு உறுதி!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும்...

1750703321 srilankan airlines
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடர்த்தியான மூடுபனி: 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மத்தளை மற்றும் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டன!

இன்று அதிகாலையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய அடர்த்தியான மூடுபனி காரணமாக, இங்கு...

images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...