வரிசையில் காத்திருந்து பெற்றோல் பெற்றார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்

IMG 20220625 WA0098

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் A.கேதீஸ்வரன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் இன்று மாலை வடமராட்சி, புலோலி பல நோக்கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.

இதன் போது 4 கிலோ மீற்றர் வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வரிசையில் காத்திருந்தன. இவ் வரிசையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் A.கேதீஸ்வரனும் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதில் பல நூற்றுக்கணக்கான தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் கைத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version