வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களிலும் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் முன்பள்ளி ஆசிரியர்களை சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஆளுநர் யாழ்ப்பாணத்தில் இல்லாத காரனத்தினால் ஆளுநரின் செயலாளருடன் வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
எனினும் குறித்த சந்திப்பின் போது எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுப்பதன் மூலமே தமக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment