” நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும். அன்றைய தினம் ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.” – என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம், வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி, வாக்கெடுப்பு திகதி போன்ற விபரங்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் வெளியிட்டார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்தால் 19 ஆம் திகதியே, அவர் ஜனாதிபதியென அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு மூலம் தேர்வு நடக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
#SriLankaNews

