எந்தப் பதவியும் வேண்டாம்! – சு.க வும் உறுதி

ranil mp

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் எந்தவொரு பதவியையும் ஏற்காமல் இருப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடியது.

பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ்விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன குறித்து ஆராயப்பட்டது.

இதன்போதே அரசில் இணைவதில்லை எனவும், பதவிகளை ஏற்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version