இறுதி இலக்க அடிப்படையில் இனி எரிபொருள்!!

petrol and diesel

வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களது இலக்கத் தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு ஏற்கனவே யோசனை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, வாகன இலக்கத் தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும்,

3, 4,5, 6 இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்,

வாகன இலக்க தகட்டில் 6,7,8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version