10 25
இலங்கைசெய்திகள்

தமிழர்களின் இறுதி யுத்த நினைவுகூரல்! சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அநுர அரசாங்கம்..

Share

நாட்டில் இனவழிப்பு இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை இலங்கை இராணுவம் அழித்திருந்தால் அதனையே இனவழிப்பு என குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான சம்பவமொன்று எப்போதும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது சிவிலியன்களை பாதுகாத்துக் கொண்டே முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய போதிலும் படையினர் அவர்களை மீட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக எந்தவொரு நாட்டிலும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா அல்ல உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக கூறினால் அதனை எதிர்ப்பதாகவும் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர், அவர்களது சின்னங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என்ற போதிலும் பயங்கரவாத இயக்கமொன்றை பிரசாரம் செய்யும் வகையிலான நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....