இரு நாட்கள் எரிவாயு விநியோகம் இல்லை! – லிட்ரோ அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம்

இன்றும் நாளையும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதில் ஒரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதுடன், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது எனவும் அவர் கூறினார்.

குறித்த இரு கப்பல்களிலும் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு காணப்படுகின்றது எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

முதலாவது கப்பல் நாளை நாட்டை வந்தடைந்தவுடன், நாளை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யவோ அல்லது கொள்வனவு செய்யவோ வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version