எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பஞ்ச நிலை உருவாக அனுமதிக்கப்படமாட்டாது.
இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த இராஜாங்க அமைச்சுகளுடன் நிதி அமைச்சின் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பஸில் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் அமைச்சுக்களுக்கும் வரவு– செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை தவிர ஒவ்வொரு அமைச்சும் சமர்ப்பிக்கும் உற்பத்தி பொருளாதாரம் தொடர்பிலும் பல்வேறு திட்டங்களுக்கு 25 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.