நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு!

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு 1

ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, எரான் விக்கிரமரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் உள்ளடங்களான குழுவே பிரேரணைகளை ஒப்படைத்தன.

இப் பிரேரணைகள் நிறைவேறும் என எதிரணி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். கூடிய விரைவில் இவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version