இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் இல்லை
இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் (Budget) சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட இடமளிக்கும் நோக்கில் இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் நடத்தப்படுவதற்காகவும், புதிய ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனாலும் இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும் எதிர்வரும் மாதங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய பிரச்சினைகள் உருவாகக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.