துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜப்பான் நிறுவனமொன்றிடமிருந்து லஞ்சம் கோரியதாக நிமல் சிறிபாலடி சில்வாமீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார். சுயாதீன விசாரணைக்கும் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்து மேற்படி குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக அவர் குற்றமற்றவர் என சுட்டிக்காட்டி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
#SriLankaNews