” இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ள நிமல் லான்சா, அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்து இறுதியில் மொட்டு கட்சியில் தஞ்சமடைவார்.” – என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நெருக்கடியான கட்டத்தில் கட்சியை கைவிட்டு செல்வது அரசியல் நாகீரகம் அல்ல. சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும். அதற்காகவே மக்கள் ஆணை வழங்கி எம்மை நாடாளுமன்றம் அனுப்பி வைத்துள்ளனர். கூட்டு பொறுப்பு என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நிமல் லான்சா மட்டும் அல்ல அரசில் இருந்து சென்றவர்கள், மீண்டும் இங்குதான் வந்து தஞ்சம் அடைவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தொங்கல் நிலை அரசியல்தான் பிடித்திருக்கின்றது.” என்றார்.
#SriLankaNews