இந்த மாத முடிவுக்குள் டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ளன.
இது தொடர்பில் தெரிவித்துள்ள லங்கா ஐஓசி நிறுவனம்,
டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.
இதனடிப்படையில், ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும், 29 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் வருகை தரவுள்ளன.
அத்துடன் ஓகஸ்ட் மாதம் 10 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் எரிபொருளுடன் இலங்கைக்கு வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews