புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்
புத்தாண்டு காலப்பகுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்புகளை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றமையே இதற்கான காரணமாகும்.
முக்கியமான சில அமைச்சர்களை தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்ட நிலையில், போது தாம் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல அரசியல்வாதிகள் தமது அலுவலக தொலைபேசிகளை வீடுகளில் விட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் பண்டிகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினம் முதல் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் வெளியிடங்களுக்கு சென்ற சில அமைச்சர்கள் கொழும்பு திரும்பியுள்ளதமாக தெரிவிக்கப்படுகிறது.