துரையப்பா  மைதானத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம்,யாழ் மாவட்ட செயலகம்,யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் இணைந்து நடாத்திய  மாபெரும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா  மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது
சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஆண் பெண் இரு பாலருக்குமான சைக்கிள் ஓட்ட போட்டி மரதன் ஓட்ட போட்டி,கோலம் போடுதல் கயிறு இழுத்தல் கிளித்தட்டு விளையாட்டு பலூன் உடைத்தல் முட்டி உடைத்தல் ஆகிய போட்டிகள் இடம் பெற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
IMG 20230415 WA0025
#srilankaNews
Exit mobile version