கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளாட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, எந்தக் கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாமையினால் இவ்வாறான வாக்கெடுப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.
அதற்கைமய, உள்ளாட்சி ஆணையரால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஆளும் தரப்பு அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர், மேயராக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 48 ஆகும்.
.ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.