புதிய விசா நடைமுறை – அரசு தீர்மானம்

visa

இலங்கையில் ‘Digital Nomad Visa’ என்ற புதிய விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு இந்த புதிய விசா நடைமுறை இலகுவானதாக இருக்கும், வெளிநாடுகளில் பணியாற்றுவோர் இலங்கைக்கு வந்து வெளிநாடுகளில் உள்ள தொழில்களை டிஜிற்றல் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ள இந்த விசா ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

இந்த விசா ஊடாக இலங்கையில் இருந்து தொழில் செய்தால் அவரது பணம் நாட்டினுள் புழக்கத்துக்கு விடப்படும். அதன்மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது என்றார்.

 

Exit mobile version