20 3
இலங்கைசெய்திகள்

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கடந்த அரசாங்கத்தின் போது 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வௌிநாட்டு கடவுச்சீட்டுக் கொள்வனவு தொடர்பான விலைமனு வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி எபிக் லங்கா பிரைவேட் நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்றையதினம் (03.12.2024) சீராக்கல் மனு ஊடாக அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன (Sumathi Dharmawardena) இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

இந்த மனு முகமது லஃபார் தாஹிர் (Lafar Tahir) மற்றும் பி. குமாரன் ரத்னம் (P. Kumaran Ratnam) ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பான கண்காணிப்புகளை சமர்ப்பிக்க அந்த குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, குறித்த கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதைத் தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்குமாறு தமது வாடிக்கையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு பிரதிவாதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது தொடர்பான விசாரணையை ஜனவரி 23 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...