rtjy 299 scaled
இலங்கைசெய்திகள்

வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு

Share

வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு

நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய அன்றையதினம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன் ஆயத்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அப்போதும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல தடவைகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரியை மேலும் அதிகரிக்குமாறு கூறுகின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் அரசின் வருமானம் போதவில்லை என்பதாகும்” என அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

எங்களால் இனியும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த முடியாது. நாங்கள் அதிகபட்சமாக சுமையை ஏற்றியுள்ளோம். அரசின் வருவாய் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களிடம் நாங்கள் அந்த விடயங்களை தெளிவுபடுத்துவோம்.

என்ன செய்தாலும் இனி வரியை உயர்த்த முடியாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...