tamilni 377 scaled
இலங்கைசெய்திகள்

வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி!

Share

வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி!

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காலி முகத்திடல் பயங்கரவாத போராட்டத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் அரசியலும், ராஜபக்சர்களின் அரசியலும் முடிவுக்கு வந்து விட்டது என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் ராஜபக்சர்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒருதரப்பினர் இன்றும் அரசியல் பிரச்சாரம் செய்துக் கொள்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.

ராஜபக்சர்களின் புண்ணியத்துடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது குறிப்பிடுகிறார் பொதுஜன பெரமுன என்ற கட்சி ஒன்று இல்லை என்று.

கட்சியை பலப்படுத்த மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்துடன் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டலஸ் – அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது. கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்சர்களின் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....