கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றது.
இன்று மாலை முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி குழுவின் பரிந்துரைக்கமைய வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
#srilankaNews
Leave a comment