பெரமுனவுக்கு புதிய நிர்வாக சபை

Rajapaksa 2021.10.06 768x401 1 1

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய நிர்வாக சபையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இந்த புதிய நிர்வாக சபையை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது கட்சியின் தவிசாளர் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அப்பதவியில் இருந்து நீக்கி, புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச எந்த பதவியையும் ஏற்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version