நாட்டில் புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்கு சலுகை

tamilnaadi 17

நாட்டில் புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்கு சலுகை

நாட்டில் புதிதாக மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் செலுத்தும் வசதியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார சபைக்கு, அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்சார சபையின் ஏனைய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி தருமாறும், அதற்கான வசதிகளை உடனடியாக அறிவிக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, மின்சார சபை விரைவில் வசதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மின் உற்பத்தி திட்டம், அமைப்பு, சேவைகளின் செலவுகள், மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளின் விலை, வானிலை முன்னறிவிப்புகள் குறித்து மின்சார சபையின் இயக்க முறைமை கட்டமைப்பு பிரிவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version