மனித உரிமைகள் கற்கை நிலையத்தால் புதிய கற்கைநெறி

online education 6878

மனித உரிமைகள் கற்கை நிலையத்தால் புதிய கற்கைநெறி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகள் நிலையமானது 2021 கல்வி ஆண்டுக்கான சான்றிதழ், உயர் சான்றிதழ், டிப்ளோமா மற்றும் முதுமாணி பட்டப்படிப்பு போன்ற புதிய கற்கை நெறிகளை நடத்தவுள்ளது.

அதன்படி மனித உரிமைகள் தொடர்பில் சான்றிதழ் மட்டத்திலிருந்து முதுமாணி பட்டப்படிப்பு வரையான  கற்கைநெறிகள் நடத்தப்படவுள்ளன.

இதற்குரிய விண்ணப்பங்களை மனித உரிமைகளுக்கான கற்கை நிலையத்தின் https://cshr.cmb.ac.lk/ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 20.09.2021 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version