நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள்!

09219360

காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட  ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும் தனிமைப்படுத்த உடனடித் திட்டம் எதுவும் இல்லையெனவும், “வைரஸ் பரவுவதை தடுப்பதே முதல் நடவடிக்கை” என சுகாதார அமைச்சின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவு தலைவர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றுவதற்கு பிரதான காரணம் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமையே ஆகும்.

எனவே மக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்து சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இத்தகைய ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்படுமானால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version