ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடெங்கும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக்கொண்ட 15 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிச்சயமாகப் பங்குபெறுவார் என்று தெரியவருகின்றது.
15 பேரைக் கொண்ட அமைச்சரவையானது நாளை மாலை நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.
எனினும், இந்த அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment