ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்படும் இக்கூட்டணியில் இணைவதற்கு முக்கிய பல பிரமுகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
புதிய கூட்டணியின் சின்னம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, அதன் நிறம் மஞ்சள் நிறமாக இருக்க வாய்ப்புள்ளது என்று புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் கட்டமைப்பில் உருவான மிகப்பெரிய கூட்டணியாக இது அமையும் எனவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
டலஸ் அழகைப்பெரும தலைமையிலான எம்.பிக்கள் குழுவொன்று தேர்தல் ஆணைக்குழுவுடன் நேற்று சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
#SriLankaNews

