சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணி!

chandrika kumaratunga

புதியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தீவிரமாக இறங்கியுள்ளார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்டவர்கள் அவரின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

புதிதாக மலரும் கூட்டணியின் தலைமைப்பதவியை சந்திரிக்கா ஏற்கமாட்டாரெனவும், தலைமைத்துவ சபையொன்று ஊடாக பணிகள் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.

இக்கூட்டணியில் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சம்பிக்க ரணவக்க, அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள பலர் இக்கூட்டணியில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version