20
இலங்கைசெய்திகள்

கூட்டணி அமைக்கும் தொடர் பேச்சுவார்த்தை: ராஜபக்சர்களின் அடுத்த நகர்வு

Share

கூட்டணி அமைக்கும் தொடர் பேச்சுவார்த்தை: ராஜபக்சர்களின் அடுத்த நகர்வு

பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மொட்டு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு நேற்று (31) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விஜேராமாவில் உள்ள இல்லத்தில் கூடியது.

இதன்போது எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சஷீந்திர, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து இன்று விவாதித்தோம் எனவும், உழைக்கும் மக்களாக மே தினத்தை கொண்டாட முடிவு செய்தோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சி.பி. ரத்நாயக்க ஆகியோர் கட்சி பிரதிநிதிகளிடம் இது குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும், பிரதேச சபைத் தேர்தலில் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...