” சர்வக்கட்சி அரசில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணையாது.” – என்று முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி.தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதி எம்மை பேச்சுக்கு அழைத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் அவரின் அழைப்பை ஏற்று சந்திப்புக்கு செல்வோம். ஆனால் சர்வக்கட்சி அரசில் இணையமாட்டோம் என்ற விடயத்தை தெளிவாகக் குறிப்பிடுவோம்.
தேர்தலை நடத்தாமல், ஆட்சியை தக்கவைக்கவும், தொடரவுமே இந்த சர்வக்கட்சி அரசு முயற்சி இடம்பெறுகின்றது. மாறாக அதில் மக்கள் நலன் இல்லை.” எனவும் சுனில் ஹந்துனெத்தில் குறிப்பிட்டார்.
#SriLankaNews