வவுனியாவில் இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில் கடற்படையின் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஈரப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த அனுஸ்க அபயரத்தின லக்மால் (வயது-28) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment