tamilni 208 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு!

Share

ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது மக்கள் கூட்டத்திலேயே கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பேச்சாளர் பட்டியலில் இடமில்லை என்ற காரணத்தினால் நவீன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டத்தில் பங்கேற்காமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக நவீன் திஸாநாயக்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பேச்சாளர் பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என நவீன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் கட்சியில் தாம் தொடர்ந்தும் இணைந்திருக்கப் போவதாகவும் கட்சிய விட்டு வெளியேறப் போவதில்லை எனவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...