தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உப குழுக்கள் இன்று கூடவுள்ளன.
குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேசிய பேரவையால் நேற்று நியமிக்கப்பட்டனர்.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.