தனி தமிழீழ கோரிக்கையே ஈழத் தமிழர்களுக்கு பூகோளவியல் அரசியலில் முக்கியத்துவம் வகிக்க காரணமானது என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பானர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“மலையக மக்கள் தனி இராச்சியம் கோரவில்லை, ஆதலால் அவர்களை எந்த அரசியல் கட்சியும் பெரிதாக பார்க்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை என்பதாலேயே.
ஆனால், உலகத்தில் எந்த நாட்டுக்கு சென்றாலும் யாழ்.தமிழர்கள் பற்றியே பேசுகின்றனர். மேலும் வடக்கு பிரச்சினையை அல்லது வடக்கு கிழக்கு பிரச்சினையை கேட்கின்றனர்.
ஆனால், தெற்கில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தொடர்பில் பேசுவதில்லை. ஏனென்றால் பூகோலவியல் அரசியலுக்கு அவை அவசியமில்லை.
நுவரெலியாவில் வீடு கட்டப்பட்டதா?, பாடசாலை இருக்கிறாதா? என்பது அவசியமில்லை. பூகோலவியல் அரசியலுக்கு தேவை வடக்கு கிழக்கின் நிலைமை.
அது டயஸ்போராக்களை முன் கொண்டு உருவாக்கப்பட்ட காலசாரத்தால் ஏற்பட்டதால் ஆகும். மதம் சார்ந்த அரசியலை எமக்கு உலகத்தில் ஒழிக்க முடியாது.
ஆனால். ஆட்சியில் அவற்றை உள்ளடக்க கூடாது. உதாதாரணத்திற்கு டுபாயை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய நாடு. அதில் யாரும் வாழலாம். அதேமாதிரியான ஒரு சட்டவாக்கத்தை நாம் அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.